என் வாழ்கை என் உலகம் பகுதி -1
என் வாழ்கை
என் உலகம்
தொகுப்பு உரை :-
நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும், நம் மட்டுமே காரணம்,
ஒவ்வொரு இடத்திலும் என் தகுதிகக்கான முடிவுகளை நான் தான் எடுக்கின்றேன் அப்போது நான் தானே காரணம் மனிதன் வளர நினைக்கிறேனே தவிர வாழ நினைக்கவில்லை
இக் கதை இன்றைய மக்களின் வாழ்வின் தரத்தை கொண்டு எழுதப்பட்டது இதை எழுதியவர் (த.சீனு )
வேதியியல் பட்டதாரி,
பகுதி - 1
-------------------==============--------------------------
தனிமையில்
என் உலகம்
-------------------=============---------------------------
நான் தனிமையை உணரும் போது தான் உண்மையான அன்பும் அரவணைப்பும் எனக்கு யாரிடமும் கிடைக்கும் என்றுத் தேட தொடங்கியது,
சில உறவுகள், நண்பர்களால் பல ஏமாற்றங்களை கண்டு மனம் இருக்கி போனது அவர்கள் அவர்களின் தேவை முடிந்த உடன் பிரிந்து சென்று விடுகிறார்கள்,
ஒரு வயதுக்கு மேல் இனி எவரும் உனக்கு நிரந்தரம் இல்லை என்று புரிந்தவுடன் எனக்கு இந்த வாழ்கை ஒரு வித மன உல்லாட்சிலையும் பயத்தையும் ஏற்படுத்தியது
அழுகை இல்லாத குரல் புலம்பல் என சொல்லலாம்
அது எனக்குள் பல உறவுகள் தோன்றி அவை திடீர் என்று மறைந்து விடுவதால் என் அன்பு சுருங்கி வெறுகிய மனம் கடைசியில் திடம் பெற்றதுவிட்டது ,
இங்கு பலரும் எதை நோக்கி ஓடுகிறார்கள் என்று பார்க்கும் போது பணம் மட்டும் என்பதே பலருக்கும் ஒரு குறிக்கோளாக இருந்தது மற்றபடி யாருக்கும் எதை நோக்கி ஓடுகிறோம் என்று தெரியாமல் எல்லோரும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்
பலரும் தான் குடும்பத்தை பிரிந்து
பல உறவுகளை பிரிந்து வாழ்கிறோம்
என தெரிய வந்தது பிறரும் தேவை இல்லாத ஒரு பொருளை கடன் கொண்டு வாங்கியதல் கடன் சுமை பெற்று பல வருடம் ஓடுகிறான், பிறகு சுமை முடிந்தது வந்து பார்க்கயில் அவன் வாழ்க்கையில் பல உறவுகளை இழந்து விட்டான், இதில் நானும் ஒருவன் என்பது எனக்கே கேவலமாக இருந்து
என்ன தான் இந்த வாழ்கை என்ன ஆராந்த போது இன்பமும் துன்பம் உன்
குடும்பத்திடம் சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை என புரிந்து கொண்டேன்
- தொடரும்
த. சீனு
கருத்துகள்
கருத்துரையிடுக